Saturday 4 March 2017

தேவர் இன நாயகர்கள் - தஞ்சை வாட்டாக்குடி இரணியன் தேவர் வரலாறு 


vaataakudi iraniyan life history Thevar community Heros

வாட்டாகுடி இரணியன் தேவர் ,சாம்பவனோடை சிவராமன் தேவர்  ஆகிய இருவரும்  அகமுடைய  தேவர் இன முக்குலத்தோர்  எனும் தமிழ் போர்க்குடியில் பெரும்குடியில் பிறந்து  தாழ்த்தப்பட்ட  விவசாயக் கூலி மக்களுக்காகப், தாங்கள் பிறந்த ஆதிக்க சாதி  தேவர் சமூக டெல்ட்டா வட்டாரங்களில் ஆண்டை  என்று சொல்லப்பட்ட  முக்குலத்தோர் நில பிரபுக்களிடம் போராடி தங்கள் உயிரை இழந்தவர்கள். நேதாஜி INA படையில் தேசத்தின் விடுதலைக்காக போராடியவர் இரணியன் தேவர்,

இரணியன் திரைப்படம் - 

வாட்டாகுடி இரணியன் தேவர் பற்றிய திரைப்படம்  “இரணியன் ” என்ற பெயரில் 1999ம் ஆண்டு வெளிவந்து. பல  வரலாற்று பிழைகளுடன் அந்த படம் வந்தது, குறிப்பாக இரணியன் INA நேதாஜி படையில் இருந்தவர் அது குறிப்பிடாமல் பட்டாளத்தில் இருந்து வருவது போன்று காட்சி அம்மைக்கப்பட்டு இருந்தது, அவரின் சிங்கப்பூர் மலேசிய வரலாறுகள் பதியப்படவில்லை, மேலும் அரசியல்  மற்றும் பல்வேறு ஜாதி அமைப்புகள்  தரப்புகளில் இருந்து வந்த அழுத்தங்கள் காரணமாக இப்படத்தின் பல காட்சிகள் நீக்கப்பட்டது.மேலும் கமெர்சியல் வெற்றிக்காக சில காட்சிகளுகளும் அதிகம் சேர்க்கப்பட்டன.ஆறரையடி  ஆஜான பாகுவான இரணியன் உருவத்திற்கு ஒவ்வாத ஒருவரை அவரின் பாத்திரத்தில் நடிக்க வைத்தது இரணியன் வலுவை சரியாக பிரதிபலிப்பு இல்லாமல் போனது,இருப்பினும்  இது ஓர் மறைக்கப்பட்ட மாவீரனின் வரலாற்றினை திரும்பிப் பார்க்க வைக்க உதவிற்று என்பதில் ஐய்யமில்லை!

யார் இந்த வாட்டாக்குடி இரணியன் ?

வாட்டாக்குடி இரணியன் தேவர் ,தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை வட்டம், வாட்டாக்குடி கிராமத்தில் இராமலிங்கத்தேவர்-தையல் நாயகி அம்மாளுக்கு 1920, நவம்பர் 15 அன்று பிறந்தவர் . இவரது இயற்பெயர் வெங்கடாச்சல தேவர் .

இரணியன் சிங்கப்பூர் வாழ்க்கை -

தனது 13 வது வயதில் உறவினர்களுடன் சிங்கப்பூர் சென்றார், அங்கெல்லாம் ஆங்கிலேயர்கள், சீனர்கள்,மலேசியர்களின் தோட்டங்களில் இந்தியர்கள்  அடிமைகளாக நடத்தப்பட்டது கண்டு மனம்வெதும்பினார்  இதனால் அவருக்கு பொதுவுடைமைச் சிந்தனையாளர்களுடன் உறவு ஏற்பட்டது.

தஞ்சை தம்பிக்கோட்டையை சேர்ந்த மலேசியா  கணபதி தேவர் (கபாலி திரைப்படத்தின் உண்மை கதாபாத்திரம் ) மற்றும் வீரசேனத்  தேவர்  ஆகியோருடன் இரணியனுக்கு தொடர்பு கிடைத்தது.நூல் வாசிப்புப் பழக்கம் உருவானது.பொதுவுடைமை மீதான பிடிப்பு அதிகமானது.இரகசிய அரசியல் கூட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்புக்கிட்டியது. சிங்கப்பூரில் பொதுவுடைமை மற்றும் பகுத்தறிவு சிந்தனையை வளர்த்துக் கொண்டதால் நாத்திக சிந்தனையாளன் “இரணியன்” பெயரை தனது பெயராக மாற்றிக்கொண்டார்.
இனவெறி அடக்குமுறையாளர்கள் மீது கடும் தாக்குதல்களை நடத்தி அவர்களுக்கு இந்தியர்கள் என்றால் ஒரு பயம் ஏற்படும் படி செய்தார்,

நேதாஜி படையில் இருந்து இந்திய சுதந்திர போரில் பங்கெடுத்த இரணியன் -

1943ல் சிங்கப்பூர் வந்த வங்கத்துச்சிங்கம் நேதாஜி மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரை  சந்திக்கும் வாய்ப்புப் பெற்றார்.”இரத்தம் தாருங்கள்;விடுதலை பெற்றுத்தருகிறேன்” என்று சிங்கப்பூர் தமிழர்கள் மத்தியில் நேதாஜி வீரமுழக்கமிட்டதில் அதை அங்குள்ள பெருமளவு முக்குலத்து போர்குண மக்களிடம் பசும்பொன்  தேவர் கொண்டுச்சென்று படைதிரட்டினார், இதனால் ஈர்ப்படைந்த இரணியன் நேதாஜி அமைத்த “இந்திய தேசிய இராணுவ”த்தில் போர் சேர்ந்து சிறப்பாக செயல்பட்டு பயிற்சியாளராக விரைவில் பதவி பொறுப்பில் உயர்ந்தார்.

மீண்டும் இந்திய தொழிலாளர் தலைமைக்கு திரும்பிய இரணியன் - 

நேதாஜியின் INA படை இந்திய பர்மா எல்லையில் தோல்வியடைந்த போது  அங்கிருந்து தப்பித்து தாய்லாந்து மலேசியா தரை வழியாக சிங்கப்பூர் வந்து சேர்ந்தார்,
அவருக்கு INA படை தளபதியாக இருந்தவர் என்ற வகையில் இந்தியர்களிடம் பெருமதிப்பு இருந்தது, அப்போது நேதாஜி ஆதரவு ஜப்பானிய கட்டுப்பாட்டில் சிங்கப்பூர் இருந்தது, மீண்டும் இந்திய தொழிலாளர்களுடன் இணைந்துகொண்டார்,
இரண்டாம் உலகப்போரில் தோல்வியுற்ற ஜப்பான் சிங்கப்பூரில் இருந்து ஒதுங்கி மீண்டும் ஆங்கில ஆளுகைக்கு சிங்கப்பூர் வந்தபோது இரணியன் சுமார் பன்னிரெண்டாயிரம் தொழிலாளர்களைக் கொண்ட சிங்கப்பூர் துறைமுகத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவரானார்.1946ல் தொழிற்சங்கத்தின் முடிவுக்கு ஏற்ப தொழிலாளர்களின் நலனுக்காக போராட்டம் நடத்தினார்.மலேசிய முதலாளிகளும் ஆங்கிலேயர்களும் போராட்டத்தை ரவுடிகளைக் கொண்டு நசுக்க நினைத்ததை எதிர்கொள்ள “இளைஞர் தற்கொலைப் படை”ஒன்றை நிறுவினார். இளைஞர்களுக்கு கொரில்லா பயிற்சியும் துப்பாக்கிச்சுடும் பயிற்சியும் கொடுத்தார்.

தாய் நாடு இந்தியா திரும்பிய இரணியன் - 

1948ல் மலேசியா ஆங்கில அரசு  பொதுவுடைமைக் கட்சியைத் தடை செய்தது. (1957 ஆகஸ்ட் 31 அன்று தான் விடுதலை அடைத்தது)  மலேசியாபொதுவுடைமை இயக்கத்தலைவர்கள் தலைமறைவானார்கள்.
தனது 28 வது வயதில் இரணியன் தனது பெற்றோர் வற்புறுத்தலின் காரணமாக இந்தியா திரும்பினார்,  சொந்த ஊரான வாட்டாக்குடிக்குத் சென்று குடும்பத்துடன் இணைந்துகொண்டார்.

முக்குலத்தோர் ஆண்டைகளுக்கு எதிராக போராட்டம் - 

1947ல் விடுதலையடைந்த இந்தியாவில் நேதாஜிக்கு எதிர் சிந்தனை கொண்டவர்களின் காங்கிரசு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்ததும் பணக்கார சக்திகள் தொழில் முதலாளிகளாகவும் நிலப்பிரபுக்களாகவும் மாறியிருப்பதையும் இதனால் அதிகம் தாழ்த்தட்ட மக்கள் பொருளாதார ஜாதிய தாழ்வுநிலையை கண்டு இதற்காகவா இந்திய விடுதலைக்காக நேதாஜி பாடுபட்டார் என்ற கலக்கம் அவருக்குள் உருவானது.

இந்தியாவிலும் பொதுவுடைமைக்கட்சி தடைசெய்யப்பட்டிருந்த நேரம்.அவரது ஊரான வாட்டாக்குடியில் ஆண்டைகளின் (நிலப்பிரபுக்களின்) கொடுமை தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு எதிராக அதிகரித்திருந்தது. ”சாணிப்பாலும் சவுக்கடி”யும் தலித் விவசாயத்தொழிலாளர்களுக்கு இயல்பான தண்டனையாக இருந்தது.ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும்  அவர்களின் உரிமைக்காகவும் நண்பர்களுடன் சேர்ந்து ”விவசாய சங்கம்” ஒன்றை உருவாக்கினார்.

ஆண்டைகளுடன்  மோதி விவசாயத் தொழிலாளர்களின் கூலியை உயர்த்தினார்.இதை பொறுக்க முடியாத ஆண்டைகள் பல முறை அழைத்து சொந்த சமூகத்துக்கு எதிராக செயல்பட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அன்பாகவும் அழுத்த்த்தமாகவும் எச்சரிக்கப்பட்டார், ஆனால் ஜாதியை நம்பாது வாழ்ந்த இரணியன் தொடர்ந்து சொந்த ஜாதிக்கு எதிராக செயல்பட்டார், இதனால் வெறுப்புற்ற ஆண்டைகள்
 காவல்துறையின் உதவியுடன் இவர்மீது பல வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்ய முயன்றனர்.மீண்டும் தலைமறைவு வாழ்க்கை தொடர்கதையானது.ஆண்டைகளுக்கும் அவர்களின்  முதலாளித்துவ சிந்தனையாளர்களும் காவல்துறையினர் உதவியுடன் இரணியனுடன் தொடர்புடையவர்களைக் சுட்டு கொலை செய்யத் தொடங்கினர்.

இரணியன் மறைவு -

1950 மே மாதம் 3 ஆம் நாள் இரணியனுடன் இணைந்து செயல்பட்ட சாம்பனோடை சிவராமனை காவல்துறை சுட்டுக்கொன்றது.

முடிவில் மன்னார்குடி  அருகே உள்ள வடசேரிக் காட்டில் மறைந்திருந்த இரணியனை உளவு தகவல்கள் மூலம் காவல்துறை பெரும் படையுடன் நெருங்கியது.காலில் ஏற்பட்ட காயத்தால் அவரால் ஓடமுடியவில்லை.இரணியனையும் அவருடன் இருந்த ஆம்லாப்பட்டு ஆறுமுகம் என்பவரையும் வடசேரி சம்பந்தம் செட்டியார்  என்பவர் காவல்துறைக்குக் காட்டிக்கொடுத்தார். ( பிறகு சம்பந்தம் செட்டியார்  இரணியன் உறவினர்களால் கொலைசெய்யப்பட்டார்)

1950 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் நாள் இரணியனையும் ஆம்லாப்பட்டு ஆறுமுகத்தையும் காவல்துறையினர் பிடித்தனர்.ஆறுமுகத்தின் மீது வழக்கு ஏதுமில்லை என்பதால் அவரை விடுவித்து தப்பிக்க காவல்துறையினர் சொன்ன போதும் இரணியனை விட்டுச் செல்ல மறுத்துவிட்ட ஆம்லாப்பட்டு ஆறுமுகத்தையும் இரணியனையும் காவல்துறை சுட்டுக்கொன்றது. அவரது உடல் இன்று உள்ள பட்டுக்கோட்டை ரயில் நிலையம் அருகில் புதைக்கப்பட்டது,

சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்டு உயிர்நீத்த வாட்டுக்குடி இரணியன்,சாம்பவனோடை சிவராமன் ஆகிய இருவரும் “முக்குலத்து அகமுடைய  தேவர் ”சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்

ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்க்காக சாதியை மறந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்காக சொந்த சமூகத்துடன் களமாடிய  இவர்களின் மறைக்கப்பட்ட வாழ்க்கை வரலாறு வருங்கால இளைஞர்களுக்கு சமர்ப்பணம்!

9 comments:

  1. நான் ஒரு தலித் இதை படிக்கும் போது மனசு கனமா இருக்கு, நான் படம் எடுப்பேன் இவரை பத்தி..

    ReplyDelete
    Replies
    1. please
      don't use dhalith

      Delete
    2. Naan Thevar community thalith endru koorathe nanba

      Delete
  2. அருமை..நேதாஜி அவர்களின் INA விடம் ஆங்கில அரசு சரணடைந்திருந்தால் இரணியன் அவர்களின் பெயர் பொன்னெழுத்தால் இந்திய வரலாற்றில் பதியப்பெற்றிருக்கும்.. காங்கிரஸ் முதலாளிகளின் அடிமை இந்தியாவாக மாறியிருக்காது..

    ReplyDelete
  3. இரணியன், முத்து இராமலிங்க தேவர், கரிமேட்டு கருவாயன், சீவலப்பேரி பாண்டி என்று முக்குலத்தோர் சாதியினர் மக்களுக்காக நல்ல பல செயல்கள் செய்து உள்ளனர்.... அவர்களின் வரலாறு பொன் எழுத்துக்களால் பொதிக்க பட வேண்டும்

    ReplyDelete
  4. தோழர்கள் வாட்டாக்குடி இரா. இரணியன், சாம்பனோடை சிவராமன்,ஆம்பலாம்பட்டு ஆறுமுகம் போன்றோர் பிறப்பின் காரணமாக ஒரு சாதி அடையாளம் பெற்றிருக்கலாம்.அவர்கள் ஈகை உணர்வோடு, போர்க்குணத்தோடு பொது வாழ்வில் ஈடுபட்டதற்குக் காரணம் தேர்ந்தெடுத்த கொள்கை வழிப்பட்ட அரசியல் என்பதை மறந்து விடக்கூடாது.அவர்களை இயக்கியது அவர்கள் ஏற்றுக் கொண்ட இலட்சியம்.சாதி அல்ல என்பதை கருத்தில் கொள்வோம்..

    ReplyDelete
  5. சாதியவட்டத்தில் அடக்க இயலா மாவீரன் இரணியன் ஒரு பொதுவுடைமை வாதியை ஒரு போதும் சாதிகள் கண்கொண்டு பார்க்காதீர் தனியொரு இனத்திற்கான அவர்கள் அல்ல பாட்டாளி வர்க்கத்திற்கு ஆனவர்கள் பங்காளர்கள்... வாழ்க இரணியன் புகழ் இவ் வையகம் உள்ளவரை....

    ReplyDelete
  6. அகம்படியர்கள் உண்மையிலேயே மாவீரமும் மனிதநேயமும் கொண்டவர்கள்

    ReplyDelete
  7. வாட்டகுடி இரணியன் அவர்களுக்கு வீரவணக்கம்

    ReplyDelete