Wednesday 22 February 2017

அகத்தியருக்கு, அகத்தியரின் குருநாதர் சொன்ன இரசவாத முறை...

அகத்தியருக்கு உதவிய சாணார்கள் ( இன்றைய நாடார் என்று சொல்லிக்கொள்ளும் சமூகம் )

தனது குருநாதர் மூலிகை ஒன்றின் மூலம் இரும்பைத் தங்கமாக்கிக் காட்டியதாக அகத்தியர் சொல்கிறார்.

"விந்தையான குருத்தங்கம்
விளம்பும் சொல்லை குருநாதன்
செத்தை பெருக்கித் தானெடுத்து
தென்னை மரத்தின் கீழாக
சத்தையுடைய மூலிதனை
சதிராய்ப் பிடுங்கி இரும்பிலிட்டு
மேத்தையாகச் சில்லிட்டு
மூடிப் புடமும் போட்டாரே"


"போட்ட புடத்தைச் சாணானும்
புகழாய்த் தென்னைமரச் சோலை
தொட்டமுடனே பாத்திருந்த
நொண்டிச் சாணான் கண்டறிந்தான்
வாட்டமுள்ள பொன் அதுவை
வாசாய்க் கண்டான் சோலைமகன்
தாட்டிகமாய் தானும் வந்து
சதுராய் எண்ணம் கொண்டானே" 


"கொண்டான் கையில் ஆயுதத்தை
கூறாம் கத்தி தனை எடுத்து
கண்டாற் போல தழைஒடித்து
கருவாய்க் கத்தி மேல்பூச
அண்டாதங்கம் என்ன சொல்வேன்
அப்பா சாணன் வாதமப்பா
கொண்டா மணியாம் தங்கமப்பா
கேவன தங்கம் இதுவாமே" 


- அகத்தியர் பாடல் -

குருநாதர் தனக்கு செய்து காட்டிய இரும்பை தங்கமாக்கும் முறையை விளக்கும் அகத்தியர் இறுதியில், குருநாதர் இரும்பைத் தங்கமாக மாற்றிக் காட்டியபோது அருகில் இருந்த தென்னஞ் சோலையில் இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த சாணான் என்பவன், அந்த மூலிகையை எடுத்து அரைத்து சாறை தன்னிடமிருந்த கத்தியில் பூச கத்தியானது தங்கமாய் மாறியதாம். அதனால் இந்த இரசவாத முறைக்கு "சாணான் வாதம்" என்று பெயர் வந்தது என்கிறார் அகத்தியர்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...

No comments:

Post a Comment