Tuesday, 3 October 2017

நேதாஜியின் ஐ.என்.ஏ படையில் கேப்டனாக இருந்த முக்குலத்து தேவர் இன வீர பெண் ஜானகி தேவர்

நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் ஜான்சி ராணி படையில் துணைத் தளபதியாக பதவியில் இருந்து நாட்டின் விடுதலையில் நாட்டிற்கு வெளியே கடல் கடந்து வாழ்ந்தாளும் தனது தமிழ் போர்குணத்தை நிருபித்த வீரமங்கை தேவர் இனத்தில் பிறந்த “ஜானவி தேவர்! ” அது மட்டும் அல்ல போருக்கு பிறகு பிற்காலத்தில் மலேசிய நாடாளுமன்றத்தின் முதல் இந்திய பெண் உறுப்பினர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
மலேசியாவில் நிகழ்த்தப்பட்ட நேதாஜியின் வீரமும் விவேகமும் மிக்க உணர்ச்சிகர உரைகளால் ஈர்க்கப்பட்டு அவ்வியக்கத்திலேயே தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டதோடு கடுமையான ஆயுதப்பயிற்சிகளிலும் அர்ப்பணிப்பு உணர்வோடு தன்னை ஆட்படுத்திக் கொண்டு வளர்ந்தவர் ஜானகி தேவர்.
படங்களைப் பெரிதாகப் பார்க்க படத்தினை அழுத்தவும்!
இந்திய தேசிய இரணுவத்தில் பணியாற்றிய போது கேப்டன் ஜானகி தேவர்.
இந்திய தேசிய இரணுவத்தில் பணியாற்றிய போது கேப்டன் ஜானகி தேவர்.
நேதாஜியின் தலைமையில் இயங்கிய இந்திய விடுதலைப் போர்படைதான் ‘இந்திய தேசிய இராணுவம் (INA)’. இதன் மகளிர்ப் பிரிவு ‘ராணி ஜான்சி ரெஜிமெண்ட்’. இதில் சுமார் 1,200 க்கும் மேற்பட்ட முழுப் பயிற்சியும் தேர்ச்சியும் பெற்ற பெண்கள் இடம் பெற்றிருந்தனர். அன்றைய பிரிட்டிஷ் இந்திய இரணுவத்திற்கெதிராக ஆயுதங்களைக் கொண்டு போர் தொடுத்து இந்தியாவை ஆங்கிலேயர்களிடமிருந்து மீட்பதுதான் ஐ.என்.ஏ வின் ஒரே லட்சியம்.
“ராணிஜான்சி ரெண்ஜிமெண்டில் சுமார் 80 சதத்திற்கும் மேல் இருந்தவர்கள் தமிழ்ப் பெண்களே” என்று பெருமிதத்துடன் குறிப்பட்டார் கேப்டன் லட்சுமி.
போர்ப் பயிற்சியில் புதருக்குள் ஒளிந்தவாறு ஜானகி தேவர்...
போர்ப் பயிற்சியில் புதருக்குள் ஒளிந்தவாறு ஜானகி தேவர்…
கேப்டன் லட்சுமிக்கு அடுத்தப்படியாகத் துணைக் கேப்டனாகவும் மகளிர் படையின் ஒரு பிரிவிற்குக் கேப்டனாகவும் திகழ்ந்தவர் வீரமிக்க தமிழ்ப்பெண் கேப்டன் ஜானகி தேவர். இந்திய தேசிய இராணுவத்தின் மிக முக்கியத் தலைமைப் பீடத்திலிருந்த இவர் நேதாஜியின் மிகுந்த நம்பிக்கைக்குரியவர்.
ஜானகி தேவர், முன்பு மலேயா என்றழைக்கப்பட்ட மலேசியாவின் சுதந்திரத்திற்காகப் போராடிய முதல்கட்ட முன்னோடிகளில் ஒருவர். போர்க்குணமும் சமூகவேட்கையும் கொண்ட ஜானகி தனது 18 ஆவது வயதிலேயே நேதாஜியின் ரெஜிமெண்டில் துணைக் கேப்டனாக தனது திறமை – ஆற்றல் – தேசபக்தி – பயிற்சி ஆகியவற்றின் காரணமாக நியமிக்கப்பட்டார்.
நேதாஜியின் அணிவகுப்பைத் தலைமையேற்று வழிநடத்திச் செல்லும் ஜானகி தேவர்…


இந்திய தேசிய இராணுவத்தில் தனது மகத்தான பங்களிப்பைச் செலுத்திய ஜானகி தேவர் இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக நேரடியாக பிரிட்டிஷ் இந்திய இராணுவத்திற்கெதிரான யுத்தத்தில் பர்மா – இந்தியா எல்லைப் பகுதிகளில் பல நாள்கள் களமிறங்கிப் போராடியவர். இவரது வீரத்தையும் தேசபக்தியையும் நேதாஜி வியந்து பாராட்டியுள்ளார்.
இந்திய தேசிய இரணுவத்தின் பணிமுடிந்து நேதாஜியும் மரணமடைந்தபிறகு இப்படையில் பணியாற்றிய பல முக்கியத் தலைவர்கள் மலேயா திரும்பியவுடன் அங்கு வாழும் இந்தியர்களுக்குக்கென்று ‘மலேயா இந்தியர் காங்கிரஸ்’ என்ற ஓர் அரசியல் அமைப்பை உருவாக்கினர். இந்த அமைப்பின் முதல் மாநாட்டிலேயே ஜானகிதேவர் பங்கேற்றதோடு இந்த அமைப்பைத் தோற்றுவித்தவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்.
மலேசியா நாடளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக ஜானகி 1980 முதல் 1986 வரை விளங்கியுள்ளார். மலேசிய நாடாளுமன்ற மேலவையில் இடம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி இவர்தான். இவரைப் போலவே இந்திய தேசிய இராணுவத்திலும் மலேயா இந்தியர் காங்கிரஸ் இயக்கத்திலும் தீவிரமாகப் பங்கேற்ற ஆதிநாகப்பன் என்ற தமிழரை 1949 ல் திருமணம் செய்துகொண்டார். பாரிஸ்டரான நாகப்பன் பிற்காலத்தில் மலேசிய நாட்டின் அமைச்சராகவும் திகழ்ந்துள்ளார்.
திருமதி இந்திரா காந்தியுடன் ஜானகி தேவர்...
திருமதி இந்திரா காந்தியுடன் ஜானகி தேவர்…
ஜானகி தேவருக்கு இந்திய அரசு 1997 ஆம் ஆண்டு அவரது விடுதலைப் போராட்டப் பங்களிப்புக்காக ‘பத்மஸ்ரீ’ விருதை வழங்கியது. டெல்லி வந்து அன்றைய குடியரசுத் தலைவர் மாண்பமை கே.ஆர். நாராயணனின் கரங்களால் இவ்விருதைப் பெற்றார் ஜானகி. இந்தியாவின் ‘பத்மஸ்ரீ விருது’ பெறும் முதல் மலேசியர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இத்தகைய பல உயர் பொறுப்புகளில் இருந்த ஜானகி தேவர் பல்வேறு மகளிர் அமைப்புகளிலும், பொது அமைப்புகளிலும் இருந்து தொடர்ந்து சமூக சேவை புரிந்துள்ளார்.
‘தாய்நாட்டின் விடுதலைக்காக நான் நேதாஜியின் படையில் சேர்கிறேன்’ என்று ஜானகி தன் வீட்டில் சொன்னார். அவரின் அப்பாவுக்கு கவலை காரணம் அப்போது அவரின் வயது 16 அத்துடன் பணக்கார வீட்டுப் பெண். அங்கே போய் எப்படி உன்னால் சமாளிக்க முடியும். நமது நாட்டு ராணுவத்துக்கு நீ பணத்தை கொடுக்கலாம்.அது போதும் நம் ஆண்கள் பலபேர் சென்று சண்டை போடுவார்கள் . ராணுவப் பணி உனக்கு சரிபட்டு வராது’ என்று ஒட்டு மொத்த குடும்பமும் எதிர்ப்பு தெரிவித்தது.
அதே காலகட்டத்தில் சீருடையல்லாது வழக்கமான உடையில் ஜானகி தேவர்…
குடும்பத்தின் பிடிவாதத்தைவிட ஜானகியின் பிடிவாதம் வென்றது. நேதாஜியின் ராணுவத்தில் சேர்ந்த ஜானகிக்கு, அங்கு வழங்கப்பட்ட உணவு முதல் நாள் உணவு கலக்கத்தை ஏற்படுத்தியது. வீட்டில் மகாராணி போல் வாழ்ந்துவிட்டு, இப்போது மிலிட்டரி சாப்பாடு சாப்பிட வேண்டியுள்ளதே என்று கண்ணீர் சிந்தினார். ஆனாலும், தேச விடுதலையின் மீது ஜானகிக்கு இருந்த ஆர்வமும், வெறியும் உணவு, உறக்கத்தை விரட்டியது. அவரது முகாமில் கடும் பயிற்சி பெற்ற ஜானகி, ராணுவ அதிகாரிகளுக்கான தேர்வில் முதலிடம் பிடித்து வெற்றிபெற்றார்.
ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாமில் அதிகாரியாக (அமர்ந்திருப்பவர்)
இந்திய தேசிய ராணுவத்தில் இருந்த ஜான்சி ராணி ரெஜிமென்ட் படைப் பிரிவின் 2வது மூத்த அதிகாரியாக ஜானகி நியமிக்கப்பட்டார். இந்திய தேசிய ராணுவத்தில் பெண்களின் சேவை அப்போதே தொடங்கிவிட்டது எனலாம். இரண்டாம் உலகப்போர் நடந்த போது பிரிட்டன் படைகளுக்கு எதிராக ஜானகியும், அவருடைய படையில் இருந்தவர்களும் மிக உக்கிரமாக போர் செய்தனர்.
போருக்குப் பின் மலேசிய தேசிய காங்கிரஸ் கட்சியை நிறுவி, அங்கு வாழ்ந்துவந்த இந்தியர்களின் முன்னேற்றத்துக்காகவும், நல்வாழ்வுக்காகவும் ஜானகி போராடினார். அவரது போராட்டத்தின் பலனாக மலேசியாவில் இந்தியர்களுக்கு சிறப்பு சலுகைகள், அந்தஸ்துகள் வழங்கப்ப்டடது. மலேசியாவின் ரப்பர் தோட்டங்களில் கருகிக் கொண்டிருந்த இந்தியர்களின் வாழ்க்கையை மீட்டெடுத்தப் பெருமைக்குரிய பெண்களில் ஜானகித் தேவரின் பங்கு மகத்தானது. இந்திய வம்சாவளியில் மலர்ந்த இந்த மல்லிகை  மலேசியாவில் வசித்து வந்தார் இந்த நிலையில் சென்ற 2014ம் வருடம் மே மாதம் 9ம் தேதி தனது  (93ம் வயதில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில்  இறைவனடி சேர்ந்தார்.
ஸ்ரீ ஜானகி தேவர், கராத்தே தியாகராஜனின் தந்தை ரகுபதி தேவரின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.புவான்ஸ்ரீ ஜானகி அம்மையாருக்கு ஈஸ்வர் என்ற மகனும், கவுரி என்ற மகளும் உள்ளனர்.
ஜானகி தேவரின் இறுதிச் சடங்கில் மலேசியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி குருமூர்த்தி, மத்திய பாதுகாப்பு தூதரக அதிகாரி பிரவீண்குமார், ஜானகி தேவரின் மகன் ஈஸ்வர், மகள் கௌரி, கராத்தே தியாகராஜன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்.ஐ.சி. மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாட்டில் பிறக்காமலே இந்திய விடுதலைக்காகவும் வீரத்தமிழ் மாண்பிற்காகவும் போரில் பங்கேற்ற வீரமங்கை அகமுடையார் இனத்தில் பிறந்ததற்காக பெருமை கொள்வோம்!வாழ்க வீர அகமுடையச்சி திருமதி.ஜானகி தேவர் அவர்கள் ,அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்!
Janaki Thevar Captain of Jansi Rani Regiment Indian National Army(INA-Netajai) brave Agmaudayar women who fought against British colonialism.Janaki Thevar remembered for his service for Indian freedom struggle and Malaysian Indians.

No comments:

Post a Comment