Sunday, 16 October 2016

நடிகர் சூரியாவை தெரியும் இந்த சிட்டகாங் சூரியாவை தெரியுமா ..?
====================================
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மறக்க முடியாத நாயகர் வங்கம் தந்த தங்கம் மாவீரன் சூரியா சென், சூரியா சென் (Surya Sen) (22 மார்ச் 1894 - 12 சனவரி 1934) இந்தியாவின் வங்காளத்தில் உள்ள சிட்டகாங் (தற்போது பங்களதேசில் உள்ள துறைமுக நகரம் ) பிறந்து இந்திய விடுதலை போரில் தன்னை இணைத்து கொண்டு ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சியை எதிர்த்து மிகப்பெரிய புரட்சிகர கிளர்ச்சியை நடத்தினார். அப்படி ஒரு வீரதீர போராட்டம் அது, நேதாஜி போல படைகட்டி சாகச போர் செய்தவர்,
சுதந்திரத்திற்காக கிளர்ச்சிகள் துவங்கிய நேரத்தில் கொதித்து எழுந்த இந்தியர்களை துப்பாக்கி கொண்டு ‘அடக்கம்’ செய்தது ஆங்கிலேய ராணுவம். மனம் தளராத பலர் அடிக்கு அடி, ரத்தத்திற்கு ரத்தம் என்று எதிர் தாக்குதல் நடத்தினார்கள்.
சூரியா சென், வங்காள மாநில மக்கள் அவரை ‘மாஸ்டர்தா’ என்று அழைத்தனர். காரணம் பள்ளி ஆசிரியரான சூரியா சென் இப்படி இளம் மாணவர்களை கொதித்து எழ செய்ததால் ‘மாஸ்டர்தா’ என்று அழைத்தது சரிதானே!
சிட்டகாங் ஆயுத கிடங்கி சூறையாடல் -
=================================
ஆங்கிலேயர்கள் துப்பாக்கி, பீரங்கி கொண்டு தாக்கும்போது, கத்தி, வாள் வைத்திருக்கும் வீரர்களால் போராடி ஜெயிக்கவா முடியும்? சூரியா எடுத்த முடிவு என்ன தெரியுமா? ஆங்கிலேயர்களின் போர் ஆயுத கிடங்கை பிடித்துக் கொண்டு, அவர்கள் ஆயுதம் கொண்டே போராட முடிவு செய்தார். உயிருக்கு அஞ்சா படை திரட்டினார். இந்தியன் ரிபப்ளிகன் ஆர்மி என்று ஒரு 65 பேர் கொண்ட குழுவை அமைத்தார். அவர்களை தேர்வு செய்ய சோதனையையும் வைத்தார்.
சிட்டகாங்கில் உள்ள ராணுவ கிடங்கை கைப்பற்ற முடிவு செய்தனர்.ஏப்ரல் 18, 1930 ஆண்டு, இவரது தலைமையிலான குழு ஒன்று முதலில் தொலைபேசி, தந்தி மற்றும் தொடருந்து வசதிகளை செயலிழக்க செய்தித் தொடர்பு அமைப்புகளை முற்றிலும் அழித்து விட்டனர். இதனால் சிட்டகாங் நகரம் நாட்டின் பிற பகுதிகளுடன் செய்தித் தொடர்பு வசதிகளை இழந்தது.சூரியா சென் குழுவினர் ஆயுத கிடங்கில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிய பின்னர் ஆயுத கிடங்கை சூறையாடினர்.கொடி காத்த குமரன் பற்றி தமிழகம் பெருமைப்பட்டு அவரின் தேசப்பற்றை போற்றுகிறோம் அல்லவா?, அச்சிறு வயதில் ஊக்கப்படுத்தியது யார்? என்ன பின்னணி? என்பதை இனியேனும் தெரிந்து கொள்ளவேண்டும்,
இந்த குழு இரண்டு ராணுவ கிடங்குகளை பிடித்துவிட்டாலும் அவற்றுக்கு தேவையான ரவை அதாவது வெடிமருந்து பொருட்களை அபகரிக்க முடியாமல் திரும்ப நேர்ந்தது.
இரவு 10 மணிக்கு நடந்த அந்த திடீர் தாக்குதலில் ஒரு குழு பிடிபட்டு சுட்டு வீழ்த்தப்பட்டு விட்டது. உயிருக்கு ஒரு போராட்டம். மற்றொரு சிறு குழுவே வெற்றிகரமாக கிடங்கை மட்டும் பிடித்துவிட்டது. ஆனால் வெடிமருந்து பகுதியை அபகரிக்க செல்லும் போது ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் பின்தள்ளப்பட்டு, விரட்டப்பட்டனர்.
அப்படி தப்பிய 16 பேரும் தந்தி, வெள்ளையர்கள் உபயோகித்து வந்த உல்லாச கிளப்பையும் பிடித்து விட்டனர்.
ஆனால் அன்றைய தினம் ‘குட் பிரைடே’ புனித வெள்ளி என்பதால் மூத்த அதிகாரிகள் எல்லோரும் குடும்பத்தினருடன் வீட்டிலேயே இருந்தனர். இச்சமயத்தை அறிந்த ஆங்கில அதிகாரிகள் உடனே சுற்றி வளைத்து பிடிக்க ராணுவ உதவியை நாடினர்.
.பிறகு என்ன நடந்தது தெரியுமா? இப்படி நமது கோட்டையிலேயே கிளர்ச்சியா என்று சினம் கொண்ட ஆங்கிலேய ராணுவ அதிகாரிகள் இந்த கிளர்ச்சியாளர்களை அடக்க கடும் சோதனை தொடங்கினர்.
பின்தொடர்ந்து சென்று அருகாமையிலிருந்த ஜாலாபாத் மலைப் பகுதியில் ஒளிந்து கொண்டிருந்த அவர்களை கண்டு பிடித்துவிட்டனர். சென் தன் சகாக்களை பிரிந்து செல்ல உத்தரவு போட்டு அவர்களை எல்லாம் கல்கத்தா நோக்கி செல்ல வைத்தார். சிலர் சிக்கிக் கொண்டனர். சுமார் 16 பேர் தப்பி விட்டனர்.
16 பேர் குழு சூரியாவின் தலைமையில் மீண்டும் 1932, செப்டம்பர் 24- ந்தேதியன்று ஒரு ஆங்கிலேயர் கிளப்பை தாக்கினார்கள். அதில் சுமார் 200 பேருக்கு மேல் சுட்டு வீழ்த்தியும் உள்ளனர். அந்த அஞ்சா நெஞ்சர்களில் 8 பேர் பிடிபட்டனர். ஆனாலும் சூரியா, பினாத் மற்றும் ஆறு பேர் தப்பி விட்டனர்.
சூரியா சென் பிரித்தானிய காவல்துறையிடம் அகப்படாது தலைமறைவாக இருந்து கொண்டே இந்திய விடுதலை இயக்கத்திற்குப் புத்துணர்வு ஊட்டிக்கொண்டே இருந்தார். ஒரு முறை அவரது உறவினரான நேத்திரா சென் என்பவரின் வீட்டில் தலைமறைவாக இருந்த போது, ஆங்கிலேய ராணுவத்தால் ஒரு வழியாக பிப்ரவரி 16, 1933 அன்று சிட்டகாங் அருகே கய்ராலா கிராமத்தில் சுற்றி வளைக்கப்பட்டனர். அதில் சூரியா மற்றும் இருவர் பிடிபட்டனர். ஒரு பெண் பிரீத்தியாலா வாதேட்டர் உயிரை மாய்த்துக் கொண்டார்.
தொண்டையில் குண்டு பாய்ந்தது அந்த போராட்டத்தில் சூரியா சென் தளபதி பினாத் தொண்டையில் குண்டு பாய்ந்து வீழ்ந்திருந்த நிலையில் தன்னை சுட்டுக் கொன்றுவிடுமாறு வேண்டியும் தப்பிக்க வழி இல்லாததை உணர்ந்த சூரியா, வேண்டாம், நீ ஆங்கிலேயர்களிடம் சரண் அடைந்துவிடு. நமது வீர வரலாற்றை உலகறிய செய் என்று பணித்ததை வேத வாக்காக எடுத்துக்கொண்டு அதன்படி சரணடைந்து மருத்துவ சிகிச்சை பெற்றாலும் பல இன்னல்களை சிறையில் அனுபவித்துள்ளார்.
நரக வேதனைக்கு பிறகு தூக்கு
=========================
சூரியாசென் கல்பனா தத் என்ற பெண்மணியும் பிடிபட்ட பிறகு சித்திரவதை செய்யப்பட்டனர், சூரியா சென்னைத் தூக்கில் இடுவதற்கு முன்பாக, அவரது ஒவ்வொரு பற்களையும் குறடால் பிடுங்கி எறிந்தனர். பின்னர் கால்கள் மற்றும் கைகளில் உள்ள அனைத்து மூட்டெலும்புகளை சுத்தியால் உடைத்தனர். உணர்விழந்த நிலையில் இருந்த சூரியா சென்னை தூக்கு மேடையில் ஏற்றினர். தூக்கில் தொங்க விடப்பட்டு இறந்த பிறகும் திரும்பி விடுவாரோ என்று அஞ்சி கனத்த இரும்பு கூண்டுக்குள் அடைக்கப்பட்டு வங்கக்கடலில் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
இதில் சூரியா சென் தளபதி பினாத் சிறையில் இருந்து 1947-ல் சுதந்திர நாளில் சிறைவாசம் முடிந்து சுதந்திர சுவாசத்தை அனுபவிக்க துவங்கிய பினாத் உண்மைகளை உலகறிய செய்தார்,
.திரைப்பட இயக்குனர் அசுதேஷ் கவுரிகர் 2010-ஆம் ஆண்டில் கேலின் ஹம் ஜி ஜான் சே எனும் (Khelein Hum Jee Jaan Sey) திரைப்படத்தில் சூரியா சென்னின் வாழ்க்கை படம் பிடித்து காட்டியுள்ளார். இத்திரைப்படத்தில் அபிஷேக் பச்சன் சூரியா சென்னாக நடித்துள்ளார்.
சூரியா சென் நடத்திய சிட்டகாங் ஆயுத கிடங்கி சூறையாடல் நிகழ்வை விளக்கும் வகையில், 2012-ஆம் ஆண்டில் தேவவிரத பெயின் என்பவர் இயக்கிய சிட்டகாங் எனும் திரைப்படத்தில் மனோஜ் வாஜ்பாய் என்ற திரைப்பட நடிகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அந்த சிறைவாச காலத்தில் இன்னல்களை பொறுத்துக்கொண்டு உயிரை காத்தது சூரியா சென் மற்றும் அவரின் குழுவினரின் வீர தீர போராட்டத்தை உலகறிய வேண்டும் என்ற ஒற்றை காரணமே தன்னை உயிர் வாழ வைத்ததாக சொன்னார் பினாத், மேலும் தாம் கண்ட இந்திய தேசம் பிரிவினை தம்முள் திணிக்கப்பட்ட ஓன்று என்று கூறியவர் , சாகும் வரை தான் இந்தியன் என்றுதான் பெருமையுடன் சொல்லிக்கொண்டார்,
2013ம் ஆண்டு ஏப்ரல் 11 சாவை தழுவினார் சூரியா சென் ஆத்மாவாக உலாவந்த பினாத், இந்தியாவுடன் மீண்டும் இணைந்துவிட வேண்டும் என்று ஆவலாக இருந்த அவர் அதற்க்கு கிழக்கு பாகிஸ்தானை உடைக்க வேண்டும் என்று இந்திரா அம்மையாரை சந்தித்து வேண்டிகொண்டார், பங்களாதேஷ் உருவாக அவரது யோசனைகளும் ஆலோசனைகளும் இருந்துள்ளது.
=================================
சூரியா சென் ,பினாத், லாகூரில் தூகிலடபட்ட பகத்சிங் கண்ட கனவு மொத்த இந்திய தேசத்தின் விடுதலை , பிரிவினை இல்லாத விடுதலை , காந்தி நேரு தேசத்தை கூறு போட்டு இந்த மாவீரர்கள் தியாகங்களை காலில் போட்டு மிதித்து விட்டனர் ..
சூரியா சென்னை தூக்கிலிட்ட தூக்கு மேடை,சிட்டகாங்வங்காளதேச அரசு அதனை வரலாற்று நினைவிடமாக அறிவித்துள்ளது.


1 comment: